அல்ஜீரியாவின் மோஸ்டகானெமில் உயிரியல் பூங்காவில் "7 ஆப்பிரிக்க சிங்கக்குட்டிகளை ஈன்றுள்ள வெள்ளை பெண் சிங்கம்"

0 2084

அல்ஜீரியாவின் மோஸ்டகானெமில் உயிரியல் பூங்காவில், அழிந்து வரும் இனமாக கருதப்படும் வெள்ளை பெண் சிங்கம் ஒன்று, 7 ஆப்பிரிக்க சிங்கக்குட்டிகளை ஈன்றுள்ளது.

முதலில் 4 வெள்ளை சிங்கக்குட்டிகளை ஈன்ற சிங்கம், அடுத்த ஒரு மாத இடைவெளியில், மேலும் 3 பழுப்பு நிற சிங்கக்குட்டிகளையும் ஈன்றுள்ளது.

இது ஒரு அரிய நிகழ்வு என தெரிவித்துள்ள பூங்காவின் கால்நடை மருத்துவர்கள், காடுகளில் வெள்ளை சிங்கங்கள் கிட்டத்தட்ட அழிந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் சுமார் 550 வெள்ளை சிங்கங்கள் மட்டுமே உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 

A lioness named Juliet delivered seven cubs of endangered African lion in one-month interval at Moustaland theme park in Mostaganem in western Algeria.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments